உயிருக்கு ஆபத்தான நிலையில் வடகொரிய அதிபர்! கொரோனா பாதிப்புதான் காரணமா.? அமெரிக்கா வெளியிட்ட தகவல்.!!

0
179

உயிருக்கு ஆபத்தான நிலையில் வடகொரிய அதிபர்! கொரோனா பாதிப்புதான் காரணமா.?
அமெரிக்கா வெளியிட்ட தகவல்.!!

வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 56 வயதான கிம் தனது தாத்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 15 ஆம் தேதி விழாவில் கூட கலந்துகொள்ளவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

கிம்மின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான் ஆனால், அவருக்கு என்ன சிக்கல் என்ற உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. வடகொரியா பற்றி செய்திகளை சேகரித்து வரும் தென்கொரியா செய்தி நிறுவனம் வேறொலு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கிம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். புகைப்பிடித்தல், அதிக உடல் எடை, வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவிற்கு அவரது உடல்நிலை சென்றுவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Previous articleகொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்! -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Next articleஇசைத்தம்பதிக்கு பிறந்த இசைக் குழந்தை! மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி.!!