இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்!
இந்தியாவில் மொத்தம் 8000 ற்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் வெறும் 12 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. வேறு எந்த தெற்கு ரயில்வேவிலும் கழிப்பறை வசதி இல்லை. ரயில் என்ஜின்களை இயக்குவது பெரும்பான்மையாக ஆண்களாக இருந்து வந்த வேலையில் தற்பொழுது அவர்களுக்கு நிகராக பெண்களும் இயக்குகின்றனர். தற்பொழுது வரை எந்தவித கழிப்பறை வசதி இல்லாததால் பணிபுரிபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
கழிப்பறை வசதி இல்லாததால் சிறுநீர் கழிக்க முடியாமல் பலர் நீரை பருகாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊழியர்கள் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருமாறு ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இந்தியா முழுவதும் 120 டபிள்யு ஏ.ஜி மின்சார ரயில்களில் மட்டும் இன்ஜின்களில் கழிப்பறை வசதி செய்து தந்துள்ளனர். இது தவிர்த்து கூடுதலாக ஒன்பது ரயில் என்ஜின்களின் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருவதாக தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது வரை மத்திய ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே என மொத்தம் 31 ரயில்களில் கழிப்பறை வசதி அமைத்துள்ளனர். அதேபோல தென்கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே ஆகிய 35 ரயில்வே இன்ஜின்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தந்துள்ளனர். மற்ற பகுதிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தந்த போதிலும் தற்போது வரை தெற்கு ரயில்வேயில் இயங்கும் மின்சார எஞ்சின் களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை. பெண் ஓட்டுனர்களும் அதிகமாக உள்ள வேலையில் மின்சார ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதியை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.