பொதுவாக ஆசிரியராக வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகள் இளநிலை படிப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிப்பு போன்றவற்றை முடித்துவிட்டு TET தேர்வில் தகுதி அடைந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக நிர்ணயிக்கப்படுவார்கள். பெரும்பாலும் இந்த இளநிலை படிப்புகளை படித்தவர்கள் பி ஏ மற்றும் பிஎஸ்சி போன்ற படிப்புகளை படித்தவர்களாக உள்ளனர். ஆனால் தற்பொழுது இவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம் என உயர்கல்வித்துறையானது புதிய மற்றும் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.
உயர்கல்வி துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
உயர்கல்வித்துறைச் செயலர் கே. கோபால் அவர்கள் வெளியிட்ட அரசாணையில் இனி பிஇ படித்தவர்களும் ஆசிரியர்களாக பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பிஇ படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவை படித்து முடித்த பின் பி எட் படித்து முடித்தால் உயர் கல்வி ஆசிரியராக பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்ற அனுமதிக்கப்படுவார் என்றும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உயர்கல்வி துறையின் இந்த அறிவிப்பானது பட்டங்களை பெற்று விட்டு வேலைகளை தேடி அலையக்கூடிய மாணவர்களுக்கு மற்றும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்குவதாக அமைந்திருக்கிறது. இளங்கலை முடித்தவர்கள் இரண்டு ஆண்டு பிஎட் படிப்பை படித்தல் வேண்டும் என்றும் முதுகலை பட்ட முடித்தவர்கள் ஒரு ஆண்டுக்கான பி.எட் படிப்பை முடித்தால் மட்டுமே போதும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.