ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!!

Photo of author

By CineDesk

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!!

நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை நேற்று இரவு 7 மணியோடு முடித்து விட்டன. ஏற்கனவே பிரச்சாரத்திற்காக கொடுத்த கால அவகாசத்தை நீட்டித்து  தேர்தல் ஆணையம் ஏப்ரல் 5 ஆம் தேதி மட்டும்  மேலும் 2 மணி நேரம் அதிகரித்து மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என கூறியது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சி வேட்பாளர்களுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 7 மணியுடன் முடித்துக் கொண்டனர். மொத்தம் 232 தொகுதிகளில் 140 கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளனர். நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை வாக்கு பதிவு நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அனைத்து மக்களும் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டு மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து இதுதான்: ” நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்.” இந்த கருத்து ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் மக்களின் கடமையை சரியாக செய்ய சொல்லியுள்ளார்.