இம்முறை ரூ.1000 இல்லை! வெறும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டுமே! அரசிடம் கேள்வி எழுப்பும் மக்கள்!
தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அரசு வருடம் தோறும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருவர்.அந்த வகையில் வருடந்தோறும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவர். அத்துடன் புடவை வேஷ்டி போன்றவையும் வழங்குவார்கள். மேலும் பரிசு தொகையாக ரூ 1000 வழங்கப்படும். அந்தவகையில் 2022 ஆம் ஆண்டு வரும் பொங்கல் திருநாளையொட்டி வழங்கப்படும் பரிசு பொருட்கள் குறித்து தற்போது அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார்.இம்முறை 20 பொருட்களை மட்டுமே பரிசாக அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பச்சரிசி,வெல்லம்,முந்தரி,திராட்சை,ஏலக்காய் உள்ளிட்ட அடங்கிய 20 பொருட்கள் வழங்குவதாக கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி கரும்பும் வழங்கப்படும்.அதேபோல இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் இந்த பரிசு பொருட்கள் வழங்குவதாக தெரிவித்துள்ளார். வசிக்கும் 2.15 கோடி குடும்பங்களுக்கு 1000கோடி செலவில் தற்பொழுது பொங்கல் பரிசு வழங்குவதாக மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.வருடம்தோறும் இந்த பரிசு பொருட்களுடன் பணமும் சேர்த்து வழங்குவர்.ஆனால் இம்முறை இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.ஆகையால் ட்விட்டரில் முதல்வர் இந்த அறிவிப்பு குறித்து வெளியிட்டிருந்தார்.அதில் சிலர் பணம் ஏதும் இல்லையா என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.