Home Breaking News பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!! 

பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!! 

0
பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!! 

பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!!

பொதுவாக ரயில்வே நிலையத்தில் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க சொல்வார்கள். இதனால் பல அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளது. பொதுவாக ரயில் நிலையம் என்பது பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமாக உள்ளது. இதனால் அதனை கண்காணிக்க மக்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேர் வந்து போகிறார்கள் என்று கணக்கிடுவதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க சொல்கிறார்கள். மேலும் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கினால் மக்கள் அதிகம் வராமல் இருப்பார்கள் என்பதற்காக பிளாட்பார்ம் டிக்கெட் வாங்குகிறார்கள்.

மேலும் இதற்கு முக்கிய காரணம் தேவை இல்லாமல் யாரும் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் சுற்றிக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்பதற்காக வாங்கப்படுகிறது. அப்படி நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கினாலும் இரண்டு மணி நேரம்தான் அந்த பிளாட்பார்ம் டிக்கெட் வைத்து நீங்கள் ரயில் நிலையத்தில் இருக்க முடியும். நீங்கள் ரயில்வே பிளாட்பார்மில் இருந்தால் ரயில் டிக்கெட் அல்லது பிளாட்பார்ம் டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

அப்படி உங்களிடம் இல்லை எனில் உங்களை கைது செய்ய வாய்ப்புள்ளது மற்றும் உங்கள் மீது பைன் போடுவார்கள். இது போன்று பைன் போடும்போது குறைந்தது 250 முதல் அதிகபட்சம் 1000 ரூபாய் வரை போடுவார்கள். மேலும் பிளாட்பார்ம் டிக்கெட் என்பது அனைவரும் எடுக்க தேவையில்லை பொதுமக்கள் மட்டும்தான் எடுக்க வேண்டிய அவசியம்.

அதையடுத்து பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் காவல் துறையினர், ரயில்வே துறையினர், ரயிலில் பணியாற்றுபவர், ரயில்வே ஊழியர்கள் இவர்களுக்கு பிளாட்பார்ம் டிக்கெட் தேவை இல்லை. இது போன்று பிளாட்பாரம் டிக்கெட்  வாங்கப்படுவதால் இந்தியாவிற்கு ஒரு ஆண்டிற்கு 1600 கோடி ரூபாய் கிடைப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த பிளாட்பார்ம் டிக்கெட் தொகையை ரயில்வே நிலையத்தின் மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். மேலும் நீங்களும் ரயில்வே நிலையத்தில் ஏதேனும் ஒரு குறைகள் இருந்தால் அதனை ரயில்வே துறையில் இடம் தெரிவிக்கலாம்.

author avatar
Jeevitha