சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக சிங்கப்பூர் ஆண்களை போலியாக திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு பெண்கள்.
சிங்கப்பூரில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நாட்டில் இருந்து வேலைக்காகவும் மற்றும் படிப்புக்காகவும் பல மாணவர்கள் மற்றும் மாணவிகள் என வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என பலர் சிங்கப்பூர்க்கு செல்கின்றனர். அங்கு sham marriage என்ற போலி திருமணங்கள் நடைபெற்று வந்த கும்பல் சிக்கியுள்ளது.
சிங்கப்பூரில் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வரும் பெண்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற இந்த குறுக்கு வழியை பின்பற்றுகின்றனர். இதற்கு வெளிநாட்டு பெண்கள் சிங்கப்பூர் ஆண்களை போலியாக திருமணம் செய்து கொண்டால் சிங்கப்பூரின் குடியுரிமையை எளிதாக பெற முடியும். இந்த குடியுரிமையை கொண்டு நீண்ட காலம் சிங்கப்பூரில் படிக்கவோ அல்லது வேலை செய்யவோ முடியும்.
இதனை கருத்தில் கொண்டு பல போலி திருமணங்கள் நடைபெற்று வந்துள்ளது. இந்த குறுக்கு வழியை பயன்படுத்தி தான் பல பெண்கள் சிங்கப்பூரில் வசிக்கும் ஆண்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து போலி திருமணங்களை செய்து கொள்கின்றனர். அதன் ஆவணங்களை அரசுக்கு முன் சமர்ப்பித்த பிறகு இருவரும் அவரவர் வேலையை பார்க்க செல்கின்றனர்.
இதனிடையே ஒருவர் சிக்கிய போது விசாரணையில் அவர் திருமணமான அறிகுறி வீட்டில் ஏதும் இல்லை என்றும் அவரது தாய் அப்படி ஏதும் நடக்கவில்லை என் மகனுக்கு மனைவியே இல்லை என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின் கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை 32 திருமணங்கள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை என அறிவிக்கப்பட்டுள்ளது.