தடுப்பூசி போடவில்லை எனில் டெல்டா பிளஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்- ICMR அறிவிப்பு!

Photo of author

By Kowsalya

கோவிஷில்டு மற்றும் கவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா வின் இரண்டாவது வகைகளான ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா வுக்கு எதிராக செயல்படுகின்றன என்று ICMR தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்த இரண்டு தடுப்பூசிகளும் டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக செயல் திறன்களை கொண்டுள்ளதா என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் இன் வகைகளாக உள்ள ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா, டெல்பிளஸ் ஆகியவை டெல்டாவின் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆல் ஏற்படுவதாகும். இது ஒருபக்கம் கவலைப்படும் விதமாகவே உள்ளது.

மேலும் ஐ சி எம் ஆர் இயக்குனர் ஜெனரல் பால்ராம் பார்கவா பத்திரிக்கை பேட்டியில் ஒன்றில் கூறிய பொழுது, வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ற மாதிரி தடுப்பூசிகளின் நடுநிலை தன்மையும் மாறுபடும், அதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கூற்றின்படி கோவாக்ஸ்ன் தடுப்பூசி அனைத்து வகையான ஆல்பா பீட்டா காமா போன்ற கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்த டெல்பிளஸ் ஆகியவற்றுக்கும் மாறாமல் அதன் நடுநிலை தன்மையை கொண்டுள்ளது. எனவே இது முற்றிலும் ஒரு தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.

எனவே கோவிஷில்டு மற்றும் கோவக்சின் ஆகியவை ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா ஆகிய வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் நன்கு நிறுவப்பட்ட தயாரிக்கப் பட்டுள்ளன என இயக்குனர் கூறியுள்ளார்.

டெல்டா பிளஸ் வகையைப் பற்றி பேசிய இயக்குனர், இது இப்பொழுது 12 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 10 மாநிலங்களில் 48 பாதிக்கப்பட்டோர் உள்ளனர். ஆனால் அவர்கள் மிகவும் பாதுகாப்புடன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர், என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் தெரிவித்தார்.

மேலும் டெல்டா பிளஸ் வகையை எடுத்து தனிமைப்படுத்தப்பட்டு அதனை வளர்த்து தடுப்பூசி விளைவுகள் மற்றும் அதன் அடுத்த வகைபாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல் டெல்பிளஸ் தடுப்பூசிக்கு எதிராக செயல்படுகிறதா? என்பதைக் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

டெல்டா வகை கொரோனாவில் சுமார் 15-17 , கடந்த ஆண்டு அக்டோபரில் தான் இது முதன் முதலில் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரியில் மகாராஷ்டிராவில் 60 சதவீதத்துக்கும் மேலானோர் இந்த டெல்டா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 80 நாடுகளுக்கு பரவி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் பல மாநிலங்களில் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை.

தேவையான இடங்களை கண்காணித்து வேறு ஏதேனும் நோய்த்தொற்றுகள் அவர்களுக்கு ஏற்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

எனவே தடுப்பூசிகளை போட்டு முகக்கவசம் அணிந்து நாம் செயல்படும் பொழுது இதில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.