இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

0
561
#image_title

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

வீட்டு பூஜை அறை கோயில் போன்றது. அதை முறையாக பராமரித்து வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். வீட்டிற்கு வந்தால் ஒருவித நிம்மதியை கொடுக்கும். இந்த பூஜை அறையில் உங்கள் ராசிப்படி சில பொருட்களை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, முன்னேற்றம் கிட்டும்.

மேஷம்

12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் பூஜை அறையில் துவரையை ஒரு கிண்ணத்தில் நிரப்பி வழிபட்டு வந்தால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.

ரிஷபம்

நீங்கள் பூஜை அறையில் வைக்க வேண்டிய தெய்வீகம் நிறைந்த பொருள் கற்கண்டு. இந்த பொருலுக்கு தீபாராதணை காட்டி வந்தால் மகிழ்ச்சி கிட்டும்.

மிதுனம்

பசுமாட்டில் இருந்து கிடைக்க கூடிய பொருட்களை (பால், நெய்) நெய்வேத்தியம் செய்து வந்தால் பண வரவு அதிகரிக்கும்.

கடகம்

அதிக சக்தி கொண்ட வலம்புரி சங்கை வைத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறவேறும்.

சிம்மம்

தெய்வீக சக்தி கொண்ட சந்தன கட்டி அல்லது சந்தன கட்டையை கடவுள் படங்களுக்கு முன் வைத்து வழிபட்டு வர முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

பூஜைக்கு பயன்படுத்தக் கூடிய கற்பூரத்தை ஒரு கிண்ணத்தில் நிரப்பி வைத்தால் செல்வம் பெருகும்.

துலாம்

லட்சுமி தேவிக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்றாக கிராம்பை ஒரு கிண்ணத்தில் வைத்து வழிபட வீட்டில் நிம்மதி உண்டாகும்.

விருச்சிகம்

ஒரு கிண்ணத்தில் மங்களம் நிறைந்த குங்குமத்தை வைத்து பூஜை செய்து வந்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு

ஒரு துண்டு விரலி மஞ்சள் கிழங்கை பூஜை அறையில் ஓர் இடத்தில் வைத்து வழிபட்டால் தடை நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

அதிக சக்தி கொண்ட கருங்காலி மாலை, வேல் உள்ளிட்ட பொருட்களை வீட்டு பூஜை அறையில் வைத்தால் நேர்மறை எண்ணங்கள் உண்டாகும்.

கும்பம்

கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டு பூஜை அறையில் வைப்பதினால் அதிர்ஷ்டம் கிட்டும்.

மீனம்

மங்களம் நிறைந்த குண்டு மஞ்சள் கிழங்கை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.

Previous articleவாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்!
Next article14 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் மட்டும் இந்த அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்யவும்!