இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஆதார் வைத்துள்ள அனைவரும் இதனை செய்ய வேண்டும்!

Photo of author

By Parthipan K

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஆதார் வைத்துள்ள அனைவரும் இதனை செய்ய வேண்டும்!

ஆதார் என்பது ஒவ்வொருவரின் அடையாள சான்றாக உள்ளது. தற்போதுள்ள உள்ள காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமானதாக உள்ளது.ஆதார் இல்லை என்றால் எந்த ஒரு அரசு சான்றிதழ் பெறுவதற்கும் ,கோவில் ,வங்கி ,போன்ற அனைத்து இடங்களிலும் ஆதார் தான் தேவைப்படுகின்றது.

அதனால் ஆதார் பதிவு செய்து பத்து ஆண்டுகள் நிறைவடந்தவர்கள் அந்த அட்டை பெறுவதற்காக கொடுத்த அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ,விவரங்களை புதுபித்துக் கொள்ள வேண்டுமென்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த மாதமே அறிவித்துள்ளது.

அதற்காக ஆதார் ஒழுங்குமுறை விதிகளில் இதற்காக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இதுதொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து ஓவ்வொரு பத்து ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அவரவர்களின் அடையாள ,முகவரிச் சான்று உள்ளிட்ட விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையவழி புதுப்பிப்பதற்கான வசதியை யுஐடிஏஐ ஏற்படுத்தியுள்ளது.இணையதள பக்கம் மற்றும் செயலி மூலம் இணையவழியில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.மேலும் ஆதார் பதிவு மையங்களுக்கு நேரடியாகச் சென்றும் விவரங்களைப் புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.