தற்காலிக தட்டச்சு காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

அரசு துறைகளில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் தட்டச்சக்காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் தட்டச்சா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளன.

இதன் அடிப்படையில்,சிறப்பு போட்டித் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு திங்கள்கிழமை (நவ.25) முதல் விண்ணப்பிக்கலாம். அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பா் 24. அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதியன்று தோ்வு நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.