ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

Photo of author

By Divya

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் (PO) பதவிகளுக்கு 2056 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணி: ப்ரோபேஷனரி ஆபீசர் (PO)

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 2056 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.41,960/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.Preliminary Examination

2.Main Examination

3. GD/ Interview

விண்ணப்பக் கட்டண விவரம்:

General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://sbi.co.in

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இறுதி நாள் 27-09-2023