நெஞ்சு வலி ஏற்பட்ட சிறுவனக்கு கை, கால்கள் அகற்றம்!!! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!!

0
34
#image_title

நெஞ்சு வலி ஏற்பட்ட சிறுவனக்கு கை, கால்கள் அகற்றம்!!! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!!

அமெரிக்கா நாட்டில் நெஞ்சுவலி ஏற்பட்ட 14 வயது கொண்ட சிறுவன் ஒருவனுக்கு கை, கால்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

அமெரிக்கா நாட்டை சேர்ந்த மதியாஸ் யூரிப் என்ற சிறுவனுக்குத் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து வரும் சிறுவன் மதியாஸ் யூரிப்புக்கு 14 வயது ஆகின்றது. இந்த சிறுவனக்கு நிமோனியா பாதிப்புடன் சேர்த்து ஸ்ட்ரெப்டோகாக்கல் என்ற வைரஸ் தொற்றும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுவன் மதியாஸ் யூரிப்பை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிறுவன் மதியாஸ் யூரிப்புக்கு நிமோனியா பாதிப்பும் ஸ்ட்ரெப்டோகாக்கல் வைரஸ் பாதிப்பும் தீவிரம் அடைந்தது.

இதன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மதியாஸ் யூரிப்புக்கு சிகிச்சையின் பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இந்த பாதிப்பினால் சிறுவன் மதியாஸ் யூரிப்பின் கைகளுக்கும், கால்களுக்கும் இடையேயான இரத்த ஓட்டம் நின்றது.

இதனால் மதியாஸ் யூரிப்பின் கைகள், கால்கள் இரண்டும் செயல் இழந்து போனது. இதையடுத்து சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் விதமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மதியாஸ் யூரிப்பின் கைகள் மற்றும் கால்கள் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் சிறுவனின் பெற்றொர்களுக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.