தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு!

0
424
Notification released by Tamilnadu Government Staff Selection Commission! Computerized exam starting this morning!
Notification released by Tamilnadu Government Staff Selection Commission! Computerized exam starting this morning!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சுகாதார அலுவலர் பதவிக்காக கணினி வழி தேர்வு நாளை சென்னையில்  நடைபெறுகின்றது.இந்த தேர்வை மொத்தம் 593 பேர் எழுதவுள்ளனர்.மேலும் தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வானது நடதப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்விற்கு 593 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்கள் 327 பேர்,பெண்கள் 266 பேர் எழுத உள்ளனர்.இன்று இதற்கான தேர்வு கணினி வழியில் நடைபெறுகின்றது. காலை 9.30  மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடைபெறும்.

மேலும் முதல் தால் தேர்வில் பட்டப்படிப்பு தேர்வு நடைபெறுகிறது.இதில் 200 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கபடுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 2 ஆம் தாள் தேர்வு நடக்கிறது. பகுதி அ வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும் பத்தாம் வகுப்பு தரம் பகுதி ஆ பொது அறிவு தேர்வும் நடக்கின்றது.

இதில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.நேர்முக தேர்வு மற்றும் ஆவணங்களுக்கு 60 மதிப்பெண்கள் என 510 மதிப்பெண்கள் வழங்கப்படும்.இந்த கணினி வழித்தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது 593 பேர் எழுதுகின்றனர்.

Previous articleஉண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்! 
Next articleவேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி!