போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது 

Photo of author

By Anand

போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது 

Anand

Notorious rowdy arrested after a year of threatening police

போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது

கடந்த ஆண்டு தல்லாகுளம் சிறப்பு படை போலீஸ் செந்திலுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த மதுரை பந்தல்குடி பகுதியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.

மதுரை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்க்கெட் பந்தல்குடி பகுதி சேர்ந்தவர் ரவுடி ராஜேஷ். இவருக்கு வயது 30 ஆகிறது. இவர் கடந்த ஆண்டு தல்லாகுளம் சிறப்பு படை போலீஸ் செந்திலுக்கு போன் மூலம் மிரட்டல் விட்டார்.

ரவுடி ராஜேஷ்

இது குறித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது . எனவே அவரை தல்லாகுளம் போலீசார் தேடி வந்தனர். மேலும் அவரைப் பிடிக்க தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகநாதன், அதிகுந்த கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராஜேஷ் பந்தல்குடி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். ஒரு ஆண்டிற்கு பிறகு போலீசாருக்கு சவால் விட்ட ரவுடி ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.