நவ-1 முதல் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!!

Photo of author

By Vijay

நவ-1 முதல் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!!

Vijay

நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும், அது இல்லையென்றால் பள்ளிச்சீருடை அல்லது பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.