இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
144

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 45,230 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,29,313 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 496 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,22,607 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 53,285 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 75,44,798 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 91.68 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 5,61,908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 8,55,800 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 11,07,43,103 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleதிமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!
Next articleதிமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!