BREAKING:தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.!!

0
220

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4-ஆம் தேதி வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளான நவம்பர்-5 வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகள் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதில், பொங்கல் பண்டிகைக்கு தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்படும். ஆனால், தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். இதனால், வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சிரமமாக இருக்கும் என்பதால் ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 4-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 5ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

BREAKING:தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.!!

மேலும், நவம்பர் 5 அன்றைய தினத்தை ஈடுசெய்யும் விதமாக மூன்றாம் சனிக்கிழமை ஆன 20.11.2021 அன்று பணி நாளாக அறிவித்துள்ளது.

Previous articleதீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்!
Next articleமாணவர்களின் படிப்புக்காக ஒரு கோடி வழங்கிய நடிகர் சூர்யா.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here