உணவில் கலப்படமா? என்ன செய்வது எப்படி கண்டு பிடிப்பது? இதோ உங்களுக்காக!

0
268
Different spices on a market in Goa, India --- Image by � Peter Adams/Corbis

பாஸ்ட் புட் என்ற நவின உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஸ்ட் புட் உடலுக்கு தீங்கானது. அதிலும் சேர்க்கும் பொருளில் உண்மை தன்மை உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கலப்படமில்லாத பரிசுத்தமான பொருள் உலகில் உண்டா அதிலும் உணவு பொருளில் என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் முன்பெல்லாம் வீடுகளில் சமயல் பொருட்களுக்கு என்ன செய்வோம். மிளகாய் பொடி வேண்டும் என்றால் மிளகாயை வாங்கி காயவைத்து நாமே அரைத்து பொடி செய்வோம். அப்படிதான் எல்லா பொடிகளும் செய்வோம். ஆனால் இன்று அனைத்துமே பாகெட் உடன் வந்து விட்டது. அது உண்மை தன்மை நம்மால் அறிய முடியாது. அதையே நாமும் உணவில் சேர்த்து சமைக்கிறோம். எத்தைக் கண்டால் பித்தம் தெளியும் என்று நாம் ஒருபுறம் நோயுடன் ஓடிக்கொண்டிருக்க சத்தமில்லாமல் சந்தடியில் உணவுபொருளில் கலப்படம் செய்துவருகிறது ஒரு கூட்டம்.

தரமான உணவு பொருள் வாங்க வேண்டும் என்பது போய் கலப்படமில்லாத உணவு பொருளா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது.ஆரோக்யமாய் வாழ வேண்டும் என்பது மட்டும் முக்கியமல்ல. நாம் உபயோகிக்கும் உணவு பொருள் எல்லாமே ஆரோக்யத்தைச் சிதைக்காமல் காக்கிறதா என்று கவனிப்பதும் முக்கியம்.
என்னென்ன பொருள்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என்பதைசற்றே கூர்ந்துகவனித்தால் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

மிளகு:
நல்ல காரத்தன்மை கொண்டிருக்கும் மிளகின் தோற்றத்தை ஒத்திருக்கிறது பப்பாளி விதை.சிறிய கப்பில் அரைதம்ளர் தண்ணீர் விட்டு மிளகை போட்டால் மிளகு உள்ளே செல்லும். பப்பாளி விதை பல் இளித்தப்படி மேலேயே மிதக்கும்.

கடுகு:
கடுகை எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருந்தால் அது தரமான கடுகு. வெள்ளையாகவோ வேறுமாதிரி நிறத்திலோ இருந்தால் அது கடுகே அல்ல.

பெருங்காயம்:
வாசனை மிக்க பெருங்காயம் உடலில் வாயுவைக் கரைக்கும். ஆனால் பெருங்காயம் கலப்பிடமில்லாமல் இருக்க வேண்டுமே. சிட்டிகை பெருங் காயத்தை ஒரு டீஸ்பூன் நீரில் கலந்தால் சற்றே பால் போன்ற நிறத்துடன் வாசனையும் வர வேண்டும். இல்லையென்றால் அது வெறுங்காயம்.

மிளகாய்த்தூள்:
அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்த மசாலாக்கள் காலம் எல்லாம் இப்போது இல்லை.அம்மியே அருங்காட்சியகத்துக்கு வந்துவிடுமோ என்றும் கூட நினைக்கதோன்றுகிறது. சரி மிளகாய்த்தூளுக்கு வருவோம். நல்ல நிறத்தில் இருக்கும்பொடிகள் எல்லாம் தரமானவை என்று சொல்ல முடியாது. சிறிய தம்ளரில் நீர் விட்டு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்தால்செங்கல் தூளாக இருந்தால் அவை நீரின் அடியில் தங்கும்.இராசயனமாக இருந்தாலும் அதிக நிறம் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க : இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

மஞ்சள் தூள்:
மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் மஞ்சளில் கலப்படம் இருக்கும் போது அவை எப்படி கிருமிநாசினியாக செயல்படும்? மஞ்சள்பொடியை நீரில் கலக்கும்போது உடனடியாக நீரின் நிறம் மஞ்சளாக மாறினால் அவை கலப்படம் என்பதை நிச்சயமாக சொல்லலாம்.மையஅரைத்த அரிசி மாவுடன் லெட் குரோமேட் என்ற இராசயன பொருள் கலந்து மஞ்சள் தூளாக விற்கப்படுகிறது. இதைக் கண்டறியஅரைடீஸ்பூன் மஞ்சள்தூளை 3 மில்லி ஆல்கஹாலுடன் 10 துளி ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை கலந்து குலுக்கும் போது வயலெட் நிற மாக மாறினால் லெட் குரோமேட் கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.

மேலும் படிக்க : கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

தேன்:
ஒரு தம்ளர் நீரில் தேன் விட்டால் கரையாமல் தம்ளருக்கு அடியில் தங்கினால் சுத்தமான தேன்.சுத்தமான பருத்தி துணியை தேனில் நனைத்து எரியும் விளக்கில் காண்பித்தால் சுத்தமான தேனாக இருந்தால் அது பற்றி எரியும்.

மேலும் படிக்க : பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். டீத்தூளில் புளியங்கொட்டை தூளும், அரிசியில் கல், நெய் போன்ற வற்றிலும் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது.

மேலும் படிக்க : நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை
Next articleதெற்கே “Go back Modi” வடக்கே “Well come Modi” வைகோவின் அரசியல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here