இனி அரிசி ஒரு கிலோ ரூ 400! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி!
இந்த கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்றால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் நிதி பற்றாக்குறையால் இலங்கை அரசு தற்பொழுது பெரும் அவதிப்பட்டு வருகிறது. அத்தோடு அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி அதிக அளவு உயர்ந்து காணப்படுகிறது. அதனால் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ 200 க்கும் மேலாக விற்கப்பட்டு வருகிறது. அதேபோல ஒரு கிலோ பருப்பின் விலை ரூ 2000 என்ற அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. இதனை ஈடு செய்ய இதர நாடுகளும் உதவி செய்து வருகின்றது. தற்போது வரை நமது இந்தியா 1.40 பில்லியன் டாலர்கள் வரை இலங்கைக்கு உதவியுள்ளது.தற்பொழுது வரை பணவீக்கத்தின் அளவு 11.1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
அதேபோல இலங்கையில் அந்நிய செலவாணியை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யமுடியாமல் பெருமாளவில் சிக்கலை சந்தித்து கச்சா எண்ணெய் போதுமான அளவு இல்லாததால் விளையும் அதிகல்லோ உயர்ந்த காரணத்தினால் அங்கு பைக் கார் போன்றவையின் பயன்பாடுகள் குறைந்துள்ளது. தற்பொழுது அங்கு அரிசியின் விலை கிலோ 448 ரூபாயாக இதனால் அங்குள்ள மக்கள் கோபத்தில் என்றும் பாராத விதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆக தற்பொழுது இலங்கை அதிக அளவு நெருக்கடியை சந்தித்து வருகிறது.
விலைவாசி உயர்வை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் அந்நாட்ட அதிபருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விலைவாசியின் உயர்வாள் பல உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது.மூன்று வேளை உணவு உண்டவர்கள் அனைவரும் தற்பொழுது ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு வாழ்ந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களை தற்போது விலை உயர்ந்து காணப்படுவதால் அங்கு உள்ள பாமர மக்கள் அனைவரும் வாழ்க்கை நடத்துவதே கேள்விக்குறியாக உள்ளது.