இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

Photo of author

By Divya

இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

Divya

உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை ஆகும்.உடலில் வியர்வை,தூசு,அழுக்கு போன்றவை படிந்து சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் இருமுறை குளிப்பதை பலரும் வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

இப்படி குளிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சமையலில் கல் உப்பு பயன்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் குளிக்கும் பொழுதும் கல் உப்பை சேர்த்துக் கொள்வது முக்கியமாகும்.

கல் உப்பில் சோடியம்,மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.நாம் குளிக்கும் நீரில் கல் உப்பு சேர்த்துக் கொண்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.கல் உப்பு கலந்த நீரில் குளித்தால் தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

கல் உப்பு நீரில் குளித்தால் தசை வலி,தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் குணமாகும்.தேமல்,சொறி சிரங்கு,முகப்பரு,உடல் காயங்கள் அனைத்தும் கல் உப்பு கலந்த நீரில் குளிப்பதால் சரியாகும்.சருமம் பளபளப்பாக மாற கல் உப்பு குளியல் போடலாம்.

என்றும் இளமையாக இருக்க கல் உப்பு கலந்த நீரில் குளிக்க வேண்டும்.அதேபோல் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு சேர்த்துக் கொண்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

கல் உப்பு குளியல்:

நீங்கள் ஒருகைப்பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த உப்பை குளிக்கும் நீரில் போட்டு கரையும் வரை மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இந்த நீரை கொண்டு குளியல் போட வேண்டும்.

கல் உப்பை அரைத்து சருமத்தில் அழுத்தம் கொடுக்காமல் தேய்த்து குளித்தால் பொலிவான சருமம் கிடைக்கும்.எனவே இனி குளிப்பதற்கு முன் தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.