இனி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்லலாம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
அனைத்து மாநில அரசுகளும் மக்களின் பாதுகாப்பிற்கு பல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் மக்களுக்கு உதவும் வகையில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகிறது.
அதனையடுத்து முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்று பல திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க முதல்வர் காவல்துறை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். மேலும் மாநில பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து போதை பொருள்கள் விற்பனையை தடுக்க வேண்டும். மேலும் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்த்ர்.
இந்த நிலையில் பெண்களுக்கு எதிராகவும், பொது இடங்களிலும் பல குற்றங்கள் நடைபெற்று கொண்டே வருகிறது. அதனை தொடர்ந்து பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் கொலை மற்றும் கொள்ளை தடுக்க மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் தமிழக அரசு அறிவிப்பில் இதுவரை 69 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து இனி மக்கள் அச்சத்துடன் வெளிய செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.