இனி குழந்தைகளுக்கு இந்த நொறுக்கு தீனி கொடுங்க!! டாக்டர் பரிந்துரைக்கும் ஹெல்தி ஸ்நாக்ஸ்!!

Photo of author

By Divya

இனி குழந்தைகளுக்கு இந்த நொறுக்கு தீனி கொடுங்க!! டாக்டர் பரிந்துரைக்கும் ஹெல்தி ஸ்நாக்ஸ்!!

Divya

நொறுக்கு தீனியை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தீனி மிகவும் சுவையாக இருப்பதால் அவற்றிற்கு அனைவரும் அடிமையாகி வருகின்றனர்.தற்பொழுது பல இனிப்பு,புளிப்பு,கார்ப்பு போன்ற சுவைகளில் வெரைட்டியான நொறுக்கு தீனி விற்பனையாகி வருகிறது.

சிலர் தினமும் நொறுக்கு தீனியை உணவாக சாப்பிடுகின்றனர்.குழந்தைகள் தினமும் ஏதேனும் ஒரு வகை நொறுக்கு தீனி உட்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.இப்படி நொறுக்கு தீனிக்கு அடிமையாகி இருந்தால் நிச்சயம் ஆயுட்காலம் குறைந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆசைக்காக எப்பொழுதாவது நொறுக்கு தீனி சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது.ஆனால் தினமும் நொறுக்கு தீனி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.கடையில் விற்கப்படும் நொறுக்கு தீனியால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைப்பதில்லை.

குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிக்கு பதில் வீட்டில் ஆரோக்கியம் தரும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.குழந்தைகளை கவரும் ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் ஐட்டம்ஸ் செய்து தரலாம்.மூக்கு சுண்டல்,பட்டாணி சுண்டல்,வெள்ளை சுண்டல்,தட்டை பயறு,பச்சை பயறு போன்றவற்றை வேகவைத்து தாளித்து தேங்காய் தூவி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

வேர்க்கடலை,மக்காச்சோளம் போன்றவற்றை வேகவைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வேர்க்கடலை,கடலை பருப்பு,பட்டாணி போன்றவற்றை பொரித்து சாப்பிடக் கொடுக்கலாம்.அரிசிப்பொரியில் பொட்டுக்கடலை,வேர்க்கடலை,பட்டாணி ஆகியவற்றை கலந்து சாப்பிடக் கொடுக்கலாம்.

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களுக்கு பதில் இளநீர்,நுங்கு போன்றவற்றை கொடுக்கலாம்.ஆரஞ்சு சாறு,எலுமிச்சை சாறு என்று பழங்களை கொண்டு நேச்சுரல் ஜூஸ் தயாரித்து பருகலாம்.

கடலை மிட்டாய்,எள் மிட்டாய்,பொட்டுக்கடலை மிட்டாய்,தேங்காய் மிட்டாய் போன்றவற்றை செய்து சாப்பிடக் கொடுக்கலாம்.மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை வேகவைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.மக்காசோளத்தை வேகவைத்து உப்பு,காரம்,எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்தால் குழ்நதைகள் சுவைத்து சாப்பிடுவார்கள்.முளைக்காட்டிய பயறை கொண்டு சால்ட் செய்து கொடுக்கலாம்.கடைகளில் விற்கும் நொறுக்கு தீனிகளை தவிர்த்துவிட்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.