GOLD வாங்க இது தான் சரியான நேரம்!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!!

0
166
#image_title

GOLD வாங்க இது தான் சரியான நேரம்!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!!

தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. நம் இந்தியர்களிடம் தங்கத்தின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதேபோல் அதன் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. எப்படி இருந்தாலும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை.

நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,520க்கு விற்பனையான நிலையில் இன்று அதன் விலை சற்று இறக்கம் கண்டு இருக்கின்றது. அதன்படி, இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.46,480க்கும், ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.5,810க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.50,704க்கும் விற்பனையாகின்றது.

அதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. கிராமுக்கு 10 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.75.40க்கும், ஒரு கிலோ ரூ.75,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து விற்பனையாவது இல்லத்தரசிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தி இருக்கின்றது.