இனி இதிலும் டிஜிட்டல் முறை தான்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் முக்கியமான சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சிறை சாலையிலும் இந்த டிஜிட்டல் முறை பின்பற்றப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் முறை வரப்போகிறது என்று அறிவிப்பு வெளியானது. அதாவது மக்கள் பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும்.
அனைவருக்கும் இந்த புதிய வசதி கொண்டுவரப்படும் என்றும் இதனால் பண மோசடி மற்றும் லஞ்சம் தொடர்பான வழக்குகள் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகள் உணவு விடுதியில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறையில் உள்ள கேன்டீன்கள் அனைத்தும் பயோமெட்ரிக் முறையுடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த முறையின் மூலம் சிறை கைதிகள் கேண்டீனில் என்ன வாங்குகிறார்கள், எவ்வளவு காசு கொடுக்கிறார்கள், ஏதேனும் முறைக்கேடான பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணித்துக் கொள்ளலாம்.
கைதிகள் அனைவரும் ஒரு வாரத்திற்கு 750 முதல் 1,000 ரூபாய் வரை பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். சிறைசாலைக்கும், உணவு விடுதிக்கும் கைதிகள் முறையாக செல்கிறார்களா என்பதையும் இந்த பயோமெட்ரிக் முறை மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து தற்போது மெட்ரோவிலும் புதிய டிஜிட்டல் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப் மூலம் இனி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
இதை ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒருவேளை நீங்கள் இதை பயன்படுத்தாத பட்சத்தில் உங்கள் நண்பர் பயன்படுத்தலாம். இன்னும் வரும் நாட்களில் பேடிஎம், ஏர்டெல் செயலி மூலமாகவும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் தமிழகத்தில் சென்னையில் மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட்டை கொண்டு பயணிக்கும் வசதியை அரசு கொண்டுவர இருக்கிறது.
இதற்கு ஒரு கார்ட் அல்லது பாஸ் வழங்கப்படும். இதை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம். இந்த ஸ்கேன் செய்யும் கருவிகள் பேருந்துகளிலும், நடத்துனர்களிடமும் வழங்கப்படும். இவ்வாறு முக்கியாமான சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.