சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Photo of author

By Rupa

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

பெண்களுக்கு உதவி புரியும் வகையில் மாநிலம் மற்றும் மத்திய அரசானது பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஊராட்சி தோறும் பெண்கள் சுய உதவி குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அரசுகள் உதவி தொகை வழங்குவது அவர்களை தொழில் முனைவார்களாக மாற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த சுய உதவி குழுவில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருள்களை சந்தை படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக ரேஷன் கடைகளில் இவர்கள் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்த மாநில அரசு கூறிவரும் நிலையில் இதனின் அடுத்த படியாக இதற்கு என்று புதுவித செயலியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

தீன் தயாள் உபாத்யாயா அந்தியோதய யோஜனா தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் தங்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதத்தில் புதிய செயலி ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

அதாவது இ காமர்ஸ் மூலம் சந்தைப்படுத்த மத்திய ஊரக வளர்ச்சியானது இதனை அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி இதற்கென்று ஈசரஸ் என்ற மையத்தையும் ஆரம்பித்துள்ளனர். இது எந்த ஒரு லாபத்தையும் எதிர்பார்க்காமல் டாடா அறக்கட்டளை மற்றும் அமைச்சகம் சார்பாக நிறுவப்பட்டுள்ளது.

சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் பொருள்களை பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பட்சத்தில் அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அவர்களின் வீட்டு வாசலிலேயே கொண்டு சேர்க்கப்படும்.

இந்த ஈ சரஸ் செயலியானது சுய உதவி குழு பெண்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருக்கும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சுய உதவிக் குழு பெண்கள் தயாரிக்கும் பொருள்களை எளிமையான முறையில் சந்தைப்படுத்த இது ஒரு அற்புதமான வழி வகையாகும்.