இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்!
நேற்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் அவர் கன்னட கொடியையும் ஏற்றினார்.அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள்.
அதனையடுத்து அவர் கூறுகையில் கன்னடம் நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல.அது நம்முடைய தேசிய மொழி என்றார். கர்நாடகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் கன்னட மொழி பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்று சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.மேலும் கன்னடத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.
மேலும் கன்னடத்திற்காகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்க வேண்டும்.கன்னடம் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வேண்டும்.கர்நாடகாவில் அடுத்து வரும் 3,4 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ரூ ஏழு லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு வந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும் என கூறினார்.கர்நாடகத்தில் ஒரே ஆண்டில் எட்டாயிரம் பள்ளி கட்டிட வகுப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் கர்நாடகத்தில் அரசு துறைகளில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக இருகின்றது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.நடப்பாண்டில் ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த காலியிடங்கள் நிரப்பும்போது கன்னடர்களுக்கு வேலை கிடைக்கும்.கர்நாடகத்தில் இன்று உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகின்றது.இந்த மாநாட்டின் மூலம் சுமார் மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும் கன்னட கொடியை அனைத்து துறைகளிலும் பறக்க செய்ய வேண்டும்.நல்ல கல்வி ,சுகாதாரம் ,வேலை ,தொழில்நுட்பம் ,அறிவியல் மற்றும் அடிப்படை வசதிகளை கொண்ட எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம்.உலகிலேயே கர்நாடகம் சிறந்த மாநிலமாக திகழும்.