இனி தொலைக்காட்சிகளில் இரண்டு சீரியல்கள் மட்டுமே!! கோரிக்கை வைத்த மகளிர் ஆணையம்!!

Photo of author

By Gayathri

தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு சேனலுக்கென தனித்தனியாக பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கேரள மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைக்க காரணமாக அமைந்தது பின்வருமாறு :-

சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களை ஆய்வு செய்ததில் சீரியல்களில் தவறான செய்திகள், ஒழுக்க கேடான காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக தெரிய வந்தது. இதனை அடுத்து மலையாளத்தில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள மகளிர் ஆணையம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பரிந்துரையில் தினமும் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதிகபட்சமாக ஒரு தொடர் 20 முதல் 30 எபிசோடுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேலும் கேரளா மகளிர் ஆணையம் பரிந்துரைத்திருப்பது, இந்த சீரியல்களின் மூலம் இளம் பார்வையாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பரிந்துரையை செய்துள்ளதாக கேரள மாநில மகளிர் ஆணையம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.