தமிழகத்தில் தற்பொழுது அதிகளவு ஸ்மார்ட் மீட்டர்கள் புழக்கத்திற்கு வர தொடங்கிய நிலையில், விவசாயத்திற்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் மின் பயன்பாட்டினுடைய துல்லிய தன்மையை அறிய முடியும் என மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு பொருத்தவரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் எவ்வளவு மின்சாரம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதனை அறிய இந்த ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தற்பொழுது வரை தமிழகத்தில் 23.55 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும் தினமும் 18 மணி நேரம் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மின்சாரத்தினுடைய பயன்பாட்டை அறிய வேண்டும் என்றும் அதனால் மின்மோட்டார்கள் பொருத்தப்படாமல் யாருக்கும் மின் இணைப்பு வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 2018 ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகளுக்கு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளதே தவிர அவற்றில் உள்ள மின் கணக்கெடுப்பானது நடைபெறாமல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்து இருப்பதாக மின்சார வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சோதனை முயற்சியாக 1200 ஸ்மார்ட் மீட்டர்கள் ஒருத்தி கண்காணிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.