டெல்லி: கோவில் பூசாரிகளின் வாக்குகளை கவரும் வகையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லி கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது வரபோகும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர கட்சி பரப்புரைகள் நடத்திக்கொண்டு வருகின்றனர்.
அதில் டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தனது ஆட்சியை தக்க வைக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 நிதி உதவி வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் சீக்கிய குருத்வாரா கிராந்திகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை பாஜக எதிர்த்தல் அல்லது தடுக்க முயச்சி செய்ய கூடாது.
அவ்வாறு செய்தல் அது மகா பாவம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் வக்பு வாரிய இமாம்கள், கெஜ்ரிவாலின் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்க்கு காரணம் ஊதிய நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என் வலியுறுத்தினர்.