இனி இந்த ஸ்மார்ட் வாட்சிகளில் மட்டும் தான் வாட்ஸ் அப் செயலி!! நிறுவனத்தின் புதிய அப்டேட்!!
இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி வாட்ஸ் அப்பை ஸ்மார்ட் வாட்சிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் wear os 3 அல்லது அதற்க்கு மேல் அம்சம் உள்ள ஸ்மார்ட் வாட்சிகளில் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.
இனி ஸ்மார்ட் வாட்சிகளில் உங்களது வாட்ஸ் அப் செயலில் வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும். இந்த புதிய வசதி வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
அந்த வகையில் இந்த புதிய அம்சம் சாம்சங் ,கூகுள் போன்ற பிரபல நிறுவங்களின் ஸ்மார்ட் வாட்சிகளில் கிடைக்கும். எனவே என்றால் wear os 3 அல்லது அதற்க்கு மேல் அம்சம் உள்ள ஸ்மார்ட் வாட்சிகளில் மட்டும்தான் இந்த வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும்.
மேலும் இந்த சேவை எதுவும் ஆப்பிள் நிறுவனம் வழங்கும் ஸ்மார்ட் வாட்சிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.