இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!!

Photo of author

By Rupa

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!!

முதல்வர் கோப்பை காண போட்டியானது மாவட்ட தோறும் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வர். அதுமட்டுமின்றி விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதியும் பல்வேறு அம்ச நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட மற்ற ஆசிரியர்கள் விளையாட்டுக்கு என்று உங்கள் பாடநேரத்தை கடன் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

அந்த வகையில் இந்த முதல்வர் கோப்பை விளையாட்டு குறித்து மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய  சுற்றுச்சூழல் அலுவலக சுவரில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த சுற்றுச்சூழல் முதல்வர் கோப்பை காண கபடி சிலம்பம் ஓட்டப்பந்தயம் என அனைத்து விளையாட்டு குறித்து படங்களும் அதில் வரையப்பட்டுள்ளது. இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்கள் பார்வையிட்டார்.

மேற்கொண்டு அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அங்கிருந்து செய்தியாளர்களில் ஒருவர் தற்பொழுது நீங்கள் நடித்த மாமன்னன் திரைப்படம் வெற்றி நடை போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது மேற்கொண்டு திரைத்துறையில் உங்களை எதிர்பார்க்கலாமா என்ற வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு உதயநிதி, இதுதான் எனது கடைசி படம் மீண்டும் நான் சினிமாவிற்கு வர வாய்ப்பே இல்லை என ஆணித்தரமாக கூறினார். இவரின் இந்த பதில் மேற்கொண்டு கட்சி பணியில் முழுமையாக ஈடுபட்டு அடுத்த அடுத்த கட்டத்திற்கு செல்ல தயார்படுத்துவது போல உள்ளது.