இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

0
61

இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதை அடுத்து சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். அவ்வாறு பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே பல்வேறு புதியவகை அம்ச நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார்.

பொதுமக்கள் மற்றும் காவலர்கள் என தங்களது குறைகளை கூற தற்பொழுது வரை பெருமளவு சிரமப்பட்டு தான் வருகின்றனர். ஏனென்றால் மக்கள் தங்களது குறைகளை கூற வரும் பட்சத்தில் ஒரு சில இடங்களில் காவலர்களை இடைத்தரகர்களாக வேலை செய்கின்றனர்.

அவ்வாறு அவர்களின் குறைகளை ஏற்றுக் கொண்டாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் வீரியமானது சற்று குறைவாக தான் உள்ளது. எனவே இதனை எல்லாம் தடுக்க தற்பொழுது சங்கர் ஜிவால் புதிய நடவடிக்கை ஒன்றை கொண்டு வந்துள்ளார்.

அதாவது விடுப்பு நாட்களை தவிர்த்து இதர நாட்களில் மக்கள் மற்றும் காவலர்கள் தன்னை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை மனுவாக அளிக்கலாம் என கூறியுள்ளார்.

அவர் தன்னைப் பார்த்து அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அந்த வகையில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் தினம்தோறும் காலை 11:30 மணி அளவில் தன்னை சந்திக்க வரலாம் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் காவலர்களை இடைத்தரவர்களாக செயல்படுவது தவிர்ப்பதோடு மக்களின் குறைகளை உடனடியாக கேட்டு அவர்களுக்கு தீர்வு காண்பித்து தரப்படும்.

இந்த அறிவிப்பானது மக்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவரை நேரில் காண்பதால் மக்களின் குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என கூறுகின்றனர்.