இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
அனைத்து மாநிலத்திலும் அரசு சார்பில் கிராம சபை கூட்டகள் நடத்தப்படுகின்றது.அந்த வகையில் கேரள மாநிலத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற வில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. கிராம சபை கூட்டங்களில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு மக்கள் அந்த கூட்டத்தில் இருக்க வேண்டும்.ஆனால் அதிக அளவில் மக்கள் பங்கு பெறமல் இருப்பதினால் தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுகின்றது.குறிப்பாக மக்கள் அதிக அளவு பங்கு பெறவில்லை என்றால் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாது.
மேலும் கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதியையும் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனை தவிர்க்க தற்போது கேரள அரசு புதிய நடவடிக்கையை தொடங்கி உள்ளது.அந்த நடவடிக்கையின் படி கேரளாவில் இனி நடைபெறும் கிராம சபை கூட்டங்கள் ஆன்லைன் மூலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலமாக கிராம சபை கூட்டத்தில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் அதிக அளவு மக்கள் பங்கு பெற்றால் தீர்மானங்கள் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்த ஆன்லைன் கிராம சபை கூட்டத்திற்கு புதிய செயலி உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.இந்த செயலி மூலம் தீர்மானங்களை நிறைவேற்றவும்,யார் யார் இந்த கூட்டத்தில் பங்கு பெறுகின்றனர் என்பதனை காண்பதற்கும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.மேலும் இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.