‘எதிர்நீச்சல்’ சீரியலில் இனி இவர் தான் ஆதி குணசேகரன்!! அவருடைய இடத்தை பூரித்தி செய்வாரா?

Photo of author

By Divya

‘எதிர்நீச்சல்’ சீரியலில் இனி இவர் தான் ஆதி குணசேகரன்!! அவருடைய இடத்தை பூரித்தி செய்வாரா?

Divya

‘எதிர்நீச்சல்’ சீரியலில் இனி இவர் தான் ஆதி குணசேகரன்!! அவருடைய இடத்தை பூரித்தி செய்வாரா?

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் மாரிமுத்து.தமிழில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும்,வில்லனாகவும் நடித்த இவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

மாரிமுத்து என்று சொல்வதை விட ஆதிகுணசேகரன் என சொன்னால் தான் அனைவருக்கும் இவர் முகம் நியாபகம் வரும்.அந்தளவிற்கு அவர் நடித்த அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரீச் ஆனது.தன் எதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்து தனது திரைப்பயணத்தில் வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த மாரிமுத்து நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நேற்று காலை எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பணி மேற்கொள்வதற்காக டப்பிங் தியேட்டருக்கு சென்றுள்ளார்.அப்பொழுது டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திடீர் என்று நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிர் பிரிந்து விட்டது.

இந்நிலையில் இவர் உயிரிழந்த தகவல் சக நடிகர்கள்,ரசிகர்கள்,திரையுலகினர் என்று அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இதையடுத்து மாரிமுத்துவின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.இதனை தொடர்ந்து திரைப் பிரபலங்கள்,சக நடிகர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.எதிர்நீச்சல் இயக்குநர்
திருச்செல்வமும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.அப்பொழுது சில செய்தியாளர்கள் இனி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார்? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இந்த கேள்விக்கு பதில் சொல்ல இது சரியான தருணம் இல்லை என கூறி பதில் கூற மறுத்து விட்டார்.

இந்நிலையில் மாரிமுத்து அவர்களின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் எம்.எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி,OAK சுந்தர் அல்லது சேத்தன் இவர்களில் யாரவது ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.