இப்போது இந்த கண்ணாடியும் வந்துவிட்டது! அப்படி அதில் என்ன இருக்கிறது!
தற்போது சூழ்நிலையில் அனைத்தும் டிஜிட்டல் உலகத்திற்கு மாறி வருகிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் கைக்குள் அடங்கும் வகையில் ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளது. அதனை அடுத்து ஸ்மார்ட் வாட்ச் மற்றும் எந்த பொருள் எடுத்தாலும் ஸ்மார்ட் டிஜிட்டல் காணப்படுகிறது.
இதனையடுத்து தற்போது மக்களின் நேரத்தை மிச்சபடுத்தும் வகையில் இப்போது மார்கெட்டில் அறிமுகமாகியிருக்கும் கண்ணாடி ஒன்று, ஸ்மார்ட்போன் செய்யும் வேலையை செய்யும்.
ஸ்மார்ட் கண்ணாடியில் நிறைய அம்சங்கள் உள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட் கண்ணாடியானது எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். இதனை அறிமுகப்படுத்திய Noise நிறுவனம் Noise i1 Smart Glass என்ற இந்த புதிய ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கியுள்ளது.
ஸ்மார்ட்போனில் இருக்கும் பல அம்சங்களுடன் கூடிய இந்தக் கண்ணாடி, 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. Noise நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, இந்தக் கண்ணாடியை நீங்கள் வாங்க விரும்பினால் ஆர்டர் செய்து வாங்கலாம் என்று Noise நிறுவனம் தெரிவித்துள்ளது.