இப்போ இந்த செல்பி தான் டிரெண்டிங்கில் இருக்கு!! அப்படி என்ன போட்டோனு பாருங்க!!

Photo of author

By CineDesk

இப்போ இந்த செல்பி தான் டிரெண்டிங்கில் இருக்கு!! அப்படி என்ன போட்டோனு பாருங்க!!

CineDesk

Now this selfie is trending !! Look at what the photo is like !!

இப்போ இந்த செல்பி தான் டிரெண்டிங்கில் இருக்கு!! அப்படி என்ன போட்டோனு பாருங்க!!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக இருப்பவர் பகத் பாசில். இவர் இந்தியாவை சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாள திரைப்படத் துறையில் நடித்து வருகிறார். இவரது தந்தை பாசில் மலையாள திரைப்பட இயக்குனர் ஆவார். 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை பாசில் இயக்கிய கையெத்தும் தூரத்த என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் 2011 ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகர் என்னும் விருதினை பெற்றார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கும் நஸ்ரியா அவர்களை திருமணம் செய்து கொண்டார். மேலும் நஸ்ரியா மற்றும் அவரது கணவரான பகத் பாஸில் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். திரைப்படங்கள் வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பகத் பாசில் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

Now this selfie is trending !! Look at what the photo is like !!இதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கமலஹாசன் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. மேலும் முதல் நாள் படப்பிடிப்பில் கமலஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வலைதளத்தில் வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் நடிகர் பகத் பாசில் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு தெலுங்கில் ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் அவர் முதல் நாள் படப்பிடிப்பிற்கு வரவில்லை. எனவே அவர் இன்று தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மேலும் படப்பிடிப்பின் போது நடிகர் கமலுடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை அவர் தற்போது வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. மேலும் இவரின் அந்த சிரிப்பை பார்த்தாலே அவர் கமலுடன் இணைந்து பணிபுரிவதை எவ்வளவு பெருமையாக நினைக்கிறார் என்பது நமக்கு புரிகிறது. அந்த புகைப்படம் செய்தியின் இடையில் இணைக்கப்பட்டுள்ளது.