இனி ரேஷன் கடைகளில் இதற்கு பதில் இது வழங்கப்படும்!! சொன்னது இவர்தான்!!
ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் மலிவான பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு இந்த ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த வகையில் ரேஷன் அட்டை மூலமாக இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வருகின்ற செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி வழங்க உள்ளார். மேலும் ரேஷன் கார்டு மூலமாக வருகின்ற பொங்கல் பணிடிகையை ஒட்டி இலவச வேட்டி சேலை மற்றும் 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும்.
எனவே பாஜகா தலைவர் அண்ணாமலை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இனி ரேஷன் அட்டைகளுக்கு சர்க்கரைக்கு பதில் பனங்கருப்பட்டி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அண்ணாமலை அவர்கள் “என் மண் என் மக்கள்” என்ற நடைபாதை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்பொழுது அண்ணாமலை அவர்கள் பரமகுடியில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.