இனி இந்த வங்கிகளிலும் யுபிஐ வசதி! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

இனி இந்த வங்கிகளிலும் யுபிஐ வசதி! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அந்த வகையில் திமுகவானது குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்குதல், நான்  முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லாத  பயண சீட்டு வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது.

எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனைத் தொடர்ந்து நான் முதல் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகள் கட்டணமில்லா பயண சீட்டு வழங்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. ஆனால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படாததால் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

மேலும் முதல்வர் இந்த திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வரும் எனவும் அவ்வப்போது கூறி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் உரிமை தொகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.

இதுபோலவே தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக தற்போதது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். வந்த அறிவிப்பில் தமிழகத்தில் கடந்த கடந்த ஓராண்டாக கூட்டுறவுத் துறையில் எடுத்து வரும் தொடர் முயற்ச்சிகளினால்  தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 54 கிளைகள் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 92 கிளைகள் அனைத்திலும் ஐ.எம்.பி.எஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் அனைத்து கூட்டுறவு துறையிலும் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படுகிறது. இந்த யுபிஐ வசதியின் மூலம் கூகுள், பேடிஎம் மற்றும் பி.எச்.ஐ.எம் உள்ளிட்ட அனைத்து பண மாற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகம் செய்யப்படுகின்றது என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.