இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!!

0
182
#image_title

இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!!

சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை தற்பொழுது ஜப்பான் நாடு கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி பேரிடர் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும்.

தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் புதுபுது டெக்னாலஜி சார்ந்த சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் பறக்கும் கார், மடித்து பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் என்று பலவிதமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றது.

சமீபத்தில் வளைத்து பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் கண்டுபிடித்து அறிமுகம் செய்திருந்தது. அந்த வகையில் தற்பொழுது ஜப்பான் நாடு சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளது.

நாம் சாதாரணமாக செல்பேன்களுக்கு சார்ஜ் போட வேண்டும் என்றால் நமக்கு ஒரு சார்ஜரும் மற்றும் அதை கனெக்ட் செய்வதற்கு மின் ஹோல்டரும் தேவைப்படும். ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலமாக புதிய கண்டுபிடிப்புகள் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது. தற்பொழுது வரை ஜப்பான் நாட்டினர் புதுப் புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த சுடுதண்ணீர் சார்ஜரும் ஒன்றாக இருக்கின்றது.

இந்த சுடு தண்ணீர் சார்ஜரை பயன்படுத்துவது மிகவும் எளிது. அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை சூடுபடுத்த வேண்டும். அதன் பின்னர் இதில் இருந்து வரும் நீராவியானது ஒரு சிறிய டர்பைனில் சேகரிக்க வேண்டும். இந்த டர்பைனில் சேகரக்கப்படும் நீராவி மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.

அந்த சமயம் பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.பி கேபிளுடன் சார்ஜர் கேபிளை சொருகி செல்போனில் இணைத்தால் சுடுதண்ணீர் மூலமாக செலாபோன்களில் சார்ஜ் ஏறும். இந்த சுடுதண்ணீர் சார்ஜர் சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Previous articleநெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!
Next articleஅதற்கு சிவகார்த்திகேயன் அடிமை அதுதான் அவருடைய வீக்னஸ்! நடிகை பிரியங்கா மோகன் பேட்டி!!