நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!

0
38
#image_title

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சமயத்தில் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி திரும்பும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்தியாவில் பலவிதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில் மிக முக்கியமான பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உள்ளது. தீபாவளிப் பண்டிகையை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படவுள்ளது.

இந்த முறை தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக் கிழமை வருவதால் விடுமுறை என்பது கூடுதலாக கிடைக்காது. இருந்தாலும் வெளியூர்களில் வேலை பார்த்து வரும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது தனி மகிழ்ச்சி ஆகும். அந்த வகையில் வெளியூர்களில் வேலை பார்க்கும் நபர்கள் சொந்த ஊருக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. ரயிலில் அனைத்து டிக்கெட்டுகளும் கடந்த ஜூலை மாதமே முன்பதிவு செய்யப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களுடைய கவனத்தை சிறப்பு பேருந்துகள் மீது திருப்பியுள்ளனர். தற்பொழுது சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி வழக்கமாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் சேர்த்து நவம்பர் 9ம் தேதி 2465 பேருந்துகள் இயக்ப்படவுள்ளது. நவம்பர் 10ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து 3395 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதே போல நவம்பர் 11ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து 3515 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஆகவே மொத்தமாக 10975 சிறப்பு பேருந்துகள் தீபாவளிப் பண்டிகைக்காக மக்கள் சிரமம் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இயக்கப்படவுள்ளது.

மேலும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தை தவிர மேலும் கூடுதலாக 5 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன் படி பொன்னேரி, திருப்பதி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும், சென்னை ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும், திண்டிவனம் வழியாக தஞ்சாவூர், குங்குமம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் வழியாக புதுச்சேரி, சிதம்பரம், கடலூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, போளூர், சேத்துப்பட்டு செல்லும் பேருந்துகளும், வடலூர், நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார் கோயில் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், வேலூர், திருத்தணி, ஆற்காடு, ஆரணி செல்லும் பேருந்துகள் சென்னை பூவிருந்தவல்லி பைப்பாஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.