இனிப்புகளில் சேர்க்கப்படும் பால் நெய் தேனில் கலப்படம் இருப்பதை இனி ஈஸியாக கண்டுபிடிக்கலாம்!!

Photo of author

By Gayathri

பண்டிகை நாட்களில் அனைவரது வீடுகளிலும் இனிப்பு வாங்கி வைப்பது வழக்கம்.குறிப்பாக தீபாவளி தினத்தில் அதிகளவு இனிப்பு வாங்கப்படுகிறது.இதனால் இனிப்பு வியாபாரம் சிறப்பாக நடக்கிறது.இந்நாளில் அதிக இனிப்பு தேவைப்படுகிறது என்பதால் லாபத்திற்காக இனிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பால்,நெய்,தேன் போன்ற பொருட்களில் கலப்படம் நடக்கிறது.செயற்கை நிறமிகள்,கலப்பட பொருட்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும்.எனவே நீங்கள் வாங்கிய பொருட்களில் கலப்படம் இருக்கிறதா என்பதை இனி ஈசியாக கண்டறியலாம்.

பால் கலப்படம்

இனிப்புகள் செய்வதற்கு மட்டுமின்றி டீ காபி போடுவதற்கும் பால் பயன்படுகிறது.இந்த பாலில் ஊட்டச்சத்துக்களை விட கலப்படம் தான் அதிகம் நிறைந்திருக்கிறது.யூரியா,சலவை தூள்,காஸ்டிக் சோடா,சோடியம் கார்பனேட்,சோடியம் பை கார்பனேட் போன்ற இராசயனங்கள் கலக்கப்படுகிறது.

பாலில் கலப்படம் இருப்பதை எளிதில் கண்டறியலாம்.ஒரு துளி பாலை சாய்வான இடத்தில் வைக்கவும்.பால் உடனே வழிய ஆரம்பித்தால் அதில் தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு கண்ணாடி குவளையில் 10 மில்லி பால் சேர்த்து நன்கு கலக்கவும்.பாலில் நுரை படிந்தால் அதில் சோப்பு கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

நெய் கலப்படம்

இனிப்புகள் சுவையாக இருக்க முக்கிய காரணம் நெய்.சிலர் லாப நோக்கத்திற்காக இந்த நெயில் அதிக கலப்படம் செய்கின்றனர்.நெயில் அடர்த்தி அதிகரிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் மாவுச்சத்து பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுகிறது.அதேபோல் மாட்டு கொழுப்பு,பன்றி கொழுப்பும் சேர்க்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது.

நெயில் கலப்படம் செய்யப்ட்டிருப்பதை எளிதில் கண்டறியலாம்.அரை தேக்கரண்டி நெய்யில் சிறிது அயோடின் சேர்க்கவும்.இவ்வாறு செய்யும் போது நெய்யின் நிறம் நீலமாக மாறினால் அது உண்ணத் தகுந்தவை அல்ல.

தேன் கலப்படம்

இனிப்பு செய்ய தேவைப்படும் மற்றொரு பொருள் தேன்.இதிலும் அதிகளவு கலப்படம் நடக்கிறது.ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும்.நீரில் தேன் கரைந்தால் அது போலி தேன் என்று அர்த்தம்.அதேபோல் பஞ்சு திரி எடுத்து தேன் தடவி பற்ற வைக்கவும்.பஞ்சு திரி உடனே எரிந்தால் அது சுத்தமான தேன் என்று அர்த்தம்.