இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!!
தமிழகத்தில் இனி எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் பேருந்து ரயிலை கடந்து ஹெலிகாப்டரில் செல்லலாம். இதன் தகவல் குறித்து டிக்கோ நிர்வாக இயக்குனர் சந்திப்பு கூறியுள்ளதாவது, தமிழக சிவில் மற்றும் மத்திய அரசின் கொள்கைப்படி கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 80 ஹெலிகாப்டர்கள் உபயோகிக்கப்படாமல் அப்படியே உள்ளது.இதனை பயன்படுத்தி தமிழகத்தில் வான்வழிப் பயணம் செய்யலாம். இது குறித்து அனுமதியானது ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு தரும் பட்சத்தில் இந்த சேவை தொடங்கப்படும்.
மேலும் ஹெலிகாப்டர் போன்றவற்றில் செல்லும் கனவை இதன் மூலம் நடுத்தர மக்கள் முதல் அனுபவித்துக் கொள்ளலாம்.விமான நிலையங்களில் எப்படி டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றார்களோ அதே போலவே இதனையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இதன் கட்டணமும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் குறைவானதாகவே நிர்ணயிக்கப்படும்.மேலும் இதன் மூலம் எண்ணற்ற வேலை வாய்ப்புகளும் உருவாகும்.அதுமட்டுமின்றி அவசர சிகிச்சை குறிப்பாக கோடை காலம் போன்ற நேரத்தில் சுற்றுலா செல்ல உள்ளிட்டவைகளில் இதன் பங்கு அதிகமாக பயன்படும்.
இது எந்த அளவுக்கு பயனளிக்க உள்ளதோ அதேபோல திட்டத்தின் செயல்படுத்த சில தேவைகள் இருப்பதால் அது குறித்து ஆலோசனை செய்தும் வருகின்றோம்.இந்த பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஹெலிப்பேடுகள் பல நிறுவனங்களுக்கு சொந்தமானவை தான்.இவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே இதனை உபயோகிக்க முடியும்.அந்த வகையில் ஒருமித்த பேச்சுவார்த்தையானது அனைவரிடமும் நடத்த வேண்டும்.எனவே இது குறித்து தொடர்ந்து கலந்தோசித்து வருகிறோம்.
அதேபோல மக்களின் பாதுகாப்பை கருதி இதில் பல வரைமுறைகளும் கொண்டுவரப்படும்.மற்ற நிறுவனங்களிடமிருந்து அனுமதி வாங்குவதற்கு முன்பாக இதில் அதிகப்படியான அரசு சார்ந்த ஹெலிப்பேடுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.அதேபோல ஹெலிப்பேடுகளை எங்கு தரை இறக்க செய்வது உள்ளிட்டவைகளை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தும் வருகிறோம்.
மேற்கொண்டு இது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட தயார் செய்து வரும் நிலையில் ஹெலிகாப்டர் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரக்கூடும்.அதேபோல இது மலிவு விலையில் மக்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.