இனி மாத்திரை இல்லாமலேயே Low BP யை குறைக்கலாம்!! இந்த 5 டிப்சை மட்டும் பலோ பண்ணுங்க!!

Photo of author

By Rupa

இனி மாத்திரை இல்லாமலேயே Low BP யை குறைக்கலாம்!! இந்த 5 டிப்சை மட்டும் பலோ பண்ணுங்க!!

இரத்தத்தில் ஏற்படுகின்ற அழுத்தங்களால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை எழுகிறது.இதில் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படும் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பு கவனிக்க வேண்டிய ஒரு பாதிப்பாக உள்ளது.இரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் இருந்தால் அதை ‘குறை ரத்த அழுத்தம்’ என்று அழைக்கின்றோம்.

காலையில் தூங்கி எழுந்த உடன் தலைசுற்றல்,கண்கள் இருட்டுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும்.

குறை இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்:

*மயக்கம்
*பார்வை மங்கள்
*அதீத உடல் சோர்வு
*தலை சுற்றல்
*வாந்தி உணர்வு
*குழப்ப நிலை
*லேசான தலைவலி

யாருக்கு குறை இரத்த அழுத்தம் ஏற்படும்?

1)கர்ப்பிணி பெண்கள்

2)ஹார்மோன் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள்

3)நரம்பியல் பிரச்சனை இருப்பவர்கள்

4)மது,புகை போன்ற போதை பழக்கம் இருப்பவர்கள்

குறை இரத்த அழுத்த பிரச்சைக்கான எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ:

*எலுமிச்சை பழச்சாறு
*தேன்
*உப்பு

ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சம் பழ சாறு இரண்டு தேக்கரண்டி,தேன் ஒரு தேக்கரண்டி மற்றும் உப்பு 1/4 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து குடித்தால் குறை இரத்த அழுத்த பாதிப்பு குணமாகும்.

*பாதாம் பருப்பு
*பால்

பத்து பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் 150 மில்லி பால் ஊற்றி கொதிக்க விடவும்.அதன் பின்னர் அரைத்த பாதாம் பேஸ்டை அதில் மிக்ஸ் செய்து குடித்து வந்தால் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.

*ரோஸ்மேரி எண்ணெய்
*தண்ணீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 10 மிலி ரோஸ்மேரி எண்ணெய் கலந்து குடித்தால் குறை இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

*கேரட்
*தேன்

ஒரு கேரட்டை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.பிறகு மிக்ஸி ஜார் எடுத்து கேரட் துண்டுகளை போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் குறை இரத்த அழுத்த பாதிப்பு குணமாகும்.

*இஞ்சி
*தேன்

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குறை இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும்.