இனி ஆதார் கார்டை வீட்டிலிருந்து படி ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம்!! மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!!
மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் மிக முக்கிய அட்டையாக உள்ளது. மேலும் ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. அதனை தொடர்ந்து மானியங்கள் மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளை பெற ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநில, மத்திய அரசு மானியங்கள் மற்றும் சலுகைகள் பெறவதற்கு ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்திருந்தது. மத்திய அரசு தர கூடிய அனைத்து சலுகை பெறுவதற்கு ஆதார் அட்டை மிகவும் அவசியம்.
மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் அட்டையை அனைவரும் புதுப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான இலவச சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உத்ய நிறுவனம் சில நாட்கள் முதல் இலவச சேவையை தொடங்கியது. மேலும் அதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பெயர் மாற்றம் ,முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் மற்றும் பிறந்த தேதி மாற்றம் இலவசமாக புதுபித்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. இந்த இலவச சேவை மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கபட்டு இருந்தது.
மேலும் ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முதலில் https://myaadhaar.uindia.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மை ஆதார் என்ற வார்த்தையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதான் பின் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண்ணிய இணக்க வேண்டும். ஒடிபி பதிவிட்டு மாற்றம் செய்ய வேண்டிய தகவலை மாற்றம் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து URN என்ற எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.