மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகை மறைவு… சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!!

0
26

 

மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகை மறைவு… சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்…

 

கடந்த சில வருடங்களாக மார்பகப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகை சிந்து அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படம் முலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிந்து. இவர் அங்காடி தெரு திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருப்பார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகை சிந்து நடித்துள்ளார்.

 

கடந்த 2020ம் ஆண்டு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்து கொண்டே சிகிச்சை பெற்று வந்தார். இவரது நிலைமையை பார்த்து நடிகர் கார்த்தி, சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மற்றும் பலர் இவரது சிகிச்சைக்கு உதவி செய்தனர். வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நடிகை சிந்துவிற்கு உடல்நிலை மேலும் மோசமடைய சென்னையில் கிளிப்பாக்கத்திலா உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஆகஸ்ட்7) அதிகாலை 2.30 மணியளவில் நடிகை சிந்துவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. நடிகை சிந்துவின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த நடிகை சிந்துவிற்கு இரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.