இனி நீங்களே உங்கள் ரேசன் கார்டை அப்டேட் செய்து கொள்ளலாம்..!
இந்திய குடிமகன் என்ற அங்கீகாரம் ரேசன் கார்டு மூலம் மக்களுக்கு கிடைக்கின்றது. ரேசன் கார்டில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று இரு வகை உள்ளது. இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களுக்கு அரிசி(இலவசம்), பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசின் நலத் திட்ட உதவி பெற பண்டிகை கால சலுகைகளை பெற இந்த ரேசன் கார்டு பெரிதும் உதவுகிறது. இந்த அட்டையில் குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவி புகைப்படம், குடும்ப உறுப்பினர்கள் பெயர், ரேசன் அட்டை வகை, முகவரி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
இந்த ரேசன் கார்டில் தொலைபேசி எண், இருப்பிட முகவரி ஆகியவற்றை அப்டேட் செய்ய இனி இ-சேவை மையம், தாலுக்கா ஆபீஸ்க்கு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் தாங்களே விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
ஸ்டெப் 01:
அதிகாரப்பூர்வ இணையதளமான https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx. என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 02:
your registered mobile number என்ற பக்கத்தை க்ளிக் செய்து அப்டேட் செய்ய உள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்யவும்.
ஸ்டெப் 03:
குடும்ப நபர்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை, முகவரி, குடும்ப தலைவர் பெயர் ஆகியவற்றில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமோ.. அதற்கு முறையான ஆவண நகலை பதிவேற்றம் செய்து அப்டேட் செய்யவும். இவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட ரேசன் கார்டு தபால் மூலம் 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.