கோடை வெயிலை தணிக்க உதவும் நுங்கு ஸ்மூத்தி!! இதை எவ்வாறு தயார் செய்வது?
உடல் சூட்டை தணித்து உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவும் நுங்கில் சூப்பரான ஸ்மூத்தி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.பொதுவாக நுங்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யக் கூடியது.அதுமட்டும் இன்றி வியர்க்குரு கொப்பளம்,சூட்டு கொப்பளம்,பித்தம் போன்ற பாதிப்புகளையும் குணமாக்க கூடியது.அடிக்கின்ற வெயிலிற்கு சுவையான நுங்கு ஸ்மூத்தி செய்து குடிப்பது நல்லது.
தேவையான பொருட்கள்:-
1)நுங்கு
2)ஐஸ்கட்டி
3)சியா விதை
4)பால்
5)பால் பவுடர்
6)தேன்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சியா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பிறகு ஒரு கப் நுங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும்.பிறகு அதில் 1/4 கப் காய்ச்சாத பால் சேர்க்கவும்.
அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் நறுக்கிய நுங்கு + பால் சேர்க்கவும்.அதனுடன் 2 தேக்கரண்டி பால் பவுடர்,3 தேக்கரண்டி தேன் மற்றும் 1/4 கப் ஐஸ்கட்டி சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஊற வைத்த சியா விதைகளை போட்டு நன்கு கலந்து விடவும்.
பிறகு இதை ப்ரிட்ஜில் 1/2 மணி நேரத்திற்கு குளிர வைத்து எடுத்தால் சுவையான நுங்கு ஸ்மூத்தி தயார்.