டீன் ஏஜ் குழந்தைகள் குடிக்க வேண்டிய ஊட்டச்சத்து பானம்!! நிச்சயம் பலன் உண்டு!!

Photo of author

By Divya

வளரும் குழந்தைகள்,இளம் வயதினர் மற்றும் பெரியவர்கள் தங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பலப்படுத்த பாலில் இந்த பொருளை கலந்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்

1)மாதுளை – ஒன்று
2)உலர் திராட்சை – 10
3)பாதாம் பருப்பு – 10
4)வாழைப்பழம் – ஒன்று

செய்முறை விளக்கம்

முதலில் பத்து பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து மற்றொரு கிண்ணத்தில் பத்து உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவிடுங்கள்.

இந்த பாதாம் பருப்பு மற்றும் உலர் திராட்சை குறைந்தது 5 மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும்.பிறகு பாதாம் பருப்பு தோலை நீக்கிவிடுங்கள்.

அடுத்து மாதுளம் பழத்தை கட் செய்து பழ விதைகளை ஒரு கிண்ணத்திற்கு சேகரித்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு மிக்சர் ஜாரில் இந்த மாதுளம் பழ விதை மற்றும் வாழைப்பழ துண்டுகளை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து ஊறவைத்த பாதாம் பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தேவையான அளவு காய்ச்சி ஆறவைத்த பசும் பால் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.

பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.இந்த பானத்தை குழந்தைகள் குடித்து வந்தால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்.உடல் சோர்வு பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் அனைவரும் இந்த பானம் செய்து பருகி வரலாம்.

தேவையான பொருட்கள்

1)பாதாம் பருப்பு – ஐந்து
2)முந்திரி பருப்பு – ஐந்து
3)பசும் பால் – 100 மில்லி
4)வால்நட் – ஐந்து

செய்முறை விளக்கம்

பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு மற்றும் வால்நட்டை தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை பாதாம் பருப்பின் தோலை மட்டும் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து தோல் நீக்கி வைத்துள்ள பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,வால்நட்டை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பாத்திரத்தில் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்குங்கள்.அதன் பிறகு அரைத்த நட்ஸ் பேஸ்டை அதில் போட்டு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து பிறகு தேன் கலந்து பருகினால் உடல் பலம் அதிகரிக்கும்.