இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஊட்டச்சத்து பால்!! இதை எப்படி செய்வது?

Photo of author

By Divya

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஊட்டச்சத்து பால்!! இதை எப்படி செய்வது?

உங்களில் பலர் இரத்த அழுத்த பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்.உடல் உழைப்பு இல்லாமை,அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த இரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.

இரத்த அழுத்தத்தால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள்:-

*மாரடைப்பு
*பக்க வாதம்
*கண் பாதிப்பு
*சிறுநீரக தொற்று

இந்த இரத்த அழுத்த பாதிப்பை மருத்துவ செலவின்றி குணப்படுத்திக் கொள்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)பேரிச்சம் பழம்
3)தேன்

செய்முறை:-

முதலில் ஒரு கிளாஸ் நாட்டு மாட்டு பால் எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும்.

பாலில் தண்ணீர் சேர்க்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.பின்னர் இரண்டு விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழங்களை நறுக்கி பாலில் சேர்க்கவும்.

மிதமான தீயில் பால் ஒரு கொதி வரும் வரை காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சுவைக்காக சிறிது தூயத் தேன் சேர்த்து கலந்து அருந்தவும்.இந்த பாலை தொடர்ந்து ஒரு மாதம் செய்து குடித்து வந்தால் இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)கற்கண்டு
3)பால்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு பல் புண்டை நறுக்கி சேர்க்கவும்.ஒரு நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சுவைக்காக சிறிது கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)மாதுளம் பழம்

செய்முறை:-

ஒரு மாதுளம் பழத்தின் விதைகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.